மதுரையில்,
மதுரையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அது குறித்து விசாரிக்கப்படும். மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். குட்கா, போதை பொருட்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வை கூட மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை. நீட் தேர்வு தேவையற்ற ஒன்று.
திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க 100 சதவீதம் முயற்சி நடந்தது. ஆனால் மக்கள் தீர்ப்புக்கு எதிராக முடிவெடுக்க வேண்டாம் என சில தலைவர்கள் சொன்னதால், அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதேபோல அதிமுகவில் சிலர் விருப்பப்பட்டதால் எங்கள் தலைவர் விஜய் நேரில் சந்தித்தார்.
ஒருசில பேரை ஒருசில சூழ்நிலையில் சந்தித்தால் அது சரியாக இருக்காது. அது மக்களுக்கும் எதிராக இருக்கும். அதனால் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றார்.