தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வடக்கு பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்துகொண்டார்.

சென்னை,

த.வெ.க. தலைவரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், நாளை மறுதினம் தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நீண்ட காலமாக நடிகராக பிறந்த நாளை கொண்டாடிய விஜய், முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது.

அலுவலகம் தயாராகி வருகிறது

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு, வியாசர்பாடி பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் தயாராகி வருகிறது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்தை, தனது பிறந்த நாளான வரும் 22-ந் தேதி திறக்க திட்டமிட்டுள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தொகுதி மக்களுடனேயே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடவும் தொகுதி மக்களின் குறைகளை கேட்க முடிவு செய்துள்ளாராம்.

விஜய் பிறந்தநாள்

சினிமா உச்ச நிலையில் இருந்த தளபதி விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக இந்த பிறந்தநாளை எதிர்கொள்வதால், தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரிடமும், ரசிகர்களிடமும் தற்போதே உற்சாகம் தொற்றிக்கொண்டுள்ளது; பிறந்தநாளை கொண்டாட விரிவான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் தவெக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு இந்த நாளை மிக விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இரத்தம் தானம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்ணன் சி.ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வடக்கு பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்தம் தானம் வழங்கினோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.