சென்னை,
2025-26ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் அனைத்து மாணவ - மாணவியர்களுக்கும் என் மகிழ்ச்சியான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்தமுறையில் உயர்கல்வியை பெற்று பல்வேறு துறைகளில் நீங்கள் சாதனையாளராக வெற்றி பெற என் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்தமுறை தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள், மனம் தளராமல் பயின்று அடுத்த முயற்சியில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்.
நம்பிக்கையோடு இருங்கள், நம்மால் முடியும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.