சென்னை,
மின் வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை மின்வாரிய தலைமையகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நாளை வெளியிடுகிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை, செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி நாளை (25.06.2026) காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு, நிதி, மனிதவளம், தளவாடப் பொருட்கள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையினை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிடுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.