தமிழக செய்திகள்

இனி ஆண்டுதோறும் அரசின் திரைப்பட விருது அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

முதல்-அமைச்சர் விஜய்யின் அனுமதி பெற்று இனி ஆண்டு தோறும் விருது தரப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நடந்த ஒரு சினிமா விழாவில் தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இயக்குனரும், நடிகருமான ரவி மரியா பேசும்போது, 'திரைத்துறையினரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் விருது வழங்கி வருகிறது. ஆனால் இந்த விருதுகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையோ, 8 ஆண்டுகளுக்கு ஒருமுறையோ சேர்த்து சேர்த்து கொடுக்கிறார்கள். சில சமயம் விருது கிடைக்கும்போது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் இல்லாமல்கூட போகிறார்கள். விருதுகள் உடனே கொடுத்தால் தான் மதிப்பாக இருக்கும்', என வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, "5 ஆண்டுக்கு ஒரு முறை கொடுத்தால் அது விருது கிடையாது. ஆண்டுதோறும் கொடுத்தால் தான் விருது. முதல்-அமைச்சர் விஜய்யின் அனுமதி பெற்று. இனி வெள்ளித்திரை, சின்னத்திரை, தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டு தோறும் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.