தமிழக செய்திகள்

“புரட்சித்தலைவர் வேறு.. புரட்சித்தலைவி வேறு.. எடப்பாடி வேறு..” - அ.தி.மு.க. குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வுடன் சேர்ந்து ஜாக்பாட் அடிக்க பார்த்தார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை,

மன்னிக்கும் தன்மை, பெருந்தன்மை இல்லாத தலைமை நீடித்த வரலாறு இல்லை. அது பழனிசாமிக்கும் ஏற்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அழிக்க இயலாது

இதுதொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்திப்பில் பேசிய அவர், “ஞானத்தை எதிர்த்து போரிட முடியும். ஆனால், காலத்தை எதிர்த்து போரிட முடியாது. காலம் வைக்கின்ற புள்ளியை உங்களால் அழிக்க இயலாது. இதுதான் எடப்பாடிக்கு நடைபெறுகின்ற நிகழ்வு. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொருவராக வெளியேற்றுகின்றார்” என்று கூறினார்.

பழனிசாமியின் தலைமை நீடிக்காது

இதனைத்தொடர்ந்து இரண்டு கோடி தொண்டர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர்தான் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “இரண்டு கோடி தொண்டர்கள் இல்லை என்று கூறவில்லை. எஸ்.பி.வேலுமணி முக்கியப் பொறுப்பாளராக இருந்து, ஒருவர் முதல்-அமைச்சராகவும் பொதுச்செயலாளராகவும் வருவதற்கு உறுதுணையாக இருந்தவர். இதனை மறந்து தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். காலம் அவருக்குப் பதில் சொல்லும். மன்னிக்கும் தன்மை, பெருந்தன்மை இல்லாத தலைமை நீடித்த வரலாறு இல்லை. அது பழனிசாமிக்கும் ஏற்படும்” என்று கூறினார்.

எஸ்.பி. வேலுமணியுடன் பேசியது என்ன

பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் பேசியது என்ன என்பது குறித்து கேள்விக்கு விளக்கம் அளித்த அவர், “பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமணம், உறவு முறையில் இருவருக்கும் வேண்டிய திருமணம். நானும் சென்றிருந்தேன், எஸ்.பி. வேலுமணியும் வந்திருந்தார். எங்களது கழக நிர்வாகிகளும் வந்திருந்தார்கள். எல்லோருமே அங்கு அருகாமையில் இருந்தோம். இருவரும் சும்மா அமர்ந்து கருத்துக்கள் பேசிக் கொண்டிருந்தோம். அரசியல் பேசவில்லை” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஜாக்பாட் ஆட்சியா..?

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜாக்பாட் ஆட்சியில் வந்திருக்கிறது என ஜாக்பாட் அடித்தவர் யார், அதில் பெயிலியர் ஆனவர் யார் என்பது நாடு அறியும். திமுகவுடன் சேர்ந்து ஜாக்பாட் அடிக்க பார்த்தார். ஆனால் முகம் கிழிக்கப்பட்டு இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை பல்வேறு நிலைகளை ஆட்சிக்கு வர வேண்டும் என துடிக்கிறார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் வந்த இயக்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் மக்கள் கேட்பது. பொதுவாக புரட்சித்தலைவர் என்பது வேறு.. புரட்சித்தலைவி என்பது வேறு.. எடப்பாடி என்பது வேறு.. அவர் புரிந்து கொண்டால் சரி” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

SCROLL FOR NEXT