தமிழக செய்திகள்

அமைச்சர் துரைகண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

அமைச்சர் துரைகண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணுக்கு கடந்த 13-ந் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரலில் தொற்று அதிகரித்ததால் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் துரைகண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT