தமிழக செய்திகள்

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் வன்னி அரசு

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். வன்னியரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துஇன்று வாழ்த்து பெற்றேன். சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன். இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. “நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள்” என வாழ்த்தி அனுப்பினார்.” என்று கூறியுள்ளார்.

ரஜினியின் அடுத்த படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது, ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ‘தர்மன்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு கமலுடன் இணைந்து ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.இதற்கு மத்தியில் ரஜினிகாந்த் தனது சுயசரிதை எழுதி முடித்துள்ளதாகவும், அதை புத்தகமாக விரைவில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT