அமைச்சர் வன்னியரசு 
தமிழக செய்திகள்

அலைகளுடன் விளையாடிய அமைச்சர் வன்னியரசு: கோவளம் கடலில் சர்பிங் செய்து அசத்தல்!

கடலில் எழும் பிரம்மாண்ட அலைகளுக்கு நடுவே சமநிலையைத் தவறவிடாமல், சர்பிங் போர்டில் நின்றபடி அவர் அலைகளில் சறுக்கி விளையாடியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

செங்கல்பட்டு,

அரசியல் களத்தில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, சாகச விளையாட்டான சர்பிங்கில் ஈடுபட்டு தனது புதிய அவதாரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அலைகளை எதிர்கொண்ட அமைச்சர்

அரசியல் மற்றும் துறை சார்ந்த பணிகளுக்கு இடையே நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சென்றார். அவர் அலைச்சறுக்கு வீரர்களைப் போல முறையான தற்காப்பு ஆடைகளை அணிந்து கொண்டு சர்பிங் போர்டுடன் கடலுக்குள் இறங்கினார். கடலில் எழும் பிரம்மாண்ட அலைகளுக்கு நடுவே சமநிலையைத் தவறவிடாமல், சர்பிங் போர்டில் நின்றபடி அவர் அலைகளில் சறுக்கி விளையாடியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

அமைச்சரின் இந்த சர்பிங் சாகசக் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மற்றும் முன்னணி செய்தி ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அரசியல் களத்தைத் தாண்டி, இளைஞர்களைக் கவரும் சாகச விளையாட்டிலும் தடம் பதித்துள்ள அமைச்சரின் இந்த புதிய முயற்சி நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT