சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டம், மீஞ்சூர் உபகோட்டத்திற்க்குட்பட்ட உதவி பொறியாளர் /இ&ப/ நகரம் மீஞ்சூர் மற்றும் மீஞ்சூர் மேற்கு பிரிவு அலுவலகம் இது நாள் வரையில் எண்: 5, பக்தவச்சலம் தெரு, மீஞ்சூர்-ல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது நுகர்வோர்களின் நலன் மற்றும் நிர்வாக காரணங்களால் 10.06.2026 முதல் கீழ்கண்ட முகவரியில் உள்ள புதிய வாடகை கட்டிடத்தில் இயங்கும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இடம்: பிளாட் எண். 30 & 31 , ஜானகி நகர், திருவொற்றியூர் பிரதான சாலை, மீஞ்சூர் - 601 203. எனவே பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் மேற்கண்ட அலுவலகத்திற்க்கு தங்களது மின்துறை சம்பந்தமாக கோரிக்கைகளுக்கு அணுகுமாறு மின்வாரியம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது