தமிழக செய்திகள்

மதுரை திருமங்கலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை - 4 சிறார்கள் போக்சோவில் கைது

திருமங்கலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 13 வயது சிறுமி கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக அந்த பகுதியில் நடந்து வந்த கோவில் திருவிழாவை ஒட்டி நடக்கும் பொருட்காட்சிக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் தன்னை 4 பேர் துன்புறுத்தியதாக சிறுமி, தனது தாயாரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் உடனடியாக புகார் அளித்தனர்.

பாலியல் துன்புறுத்தல்

இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த போலீசார் சிறுமியை கூட்டாக பாலியல் துன்புறுத்தல் செய்த புகாரில், 4 சிறார்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் மூவருக்கு 16 வயது எனவும் ஒருவருக்கு 13 வயது எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT