கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: செந்தில் பாலாஜியை வைத்துக் கொண்டு வித்தை காட்டுகிறார் மு.க.ஸ்டாலின். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருடனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். செந்தில் பாலாஜி எந்த இலாகா கொடுத்தாலும் ஊழல் செய்வார். டப்பு வாங்குவது எப்படி என்பதற்கு செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். உண்மைக்கு புறம்பாக அதிகாரிகள் நடந்துகொண்டால் சும்மவிட மாட்டேன்
திமுக ஆட்சி வந்த பிறகு கடுமையான மின்வெட்டு. அதிமுக ஆட்சி வந்த பிறகு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்ந்துள்ளது. குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்வோம் என்றார்கள். அதை செய்தார்களா? 100 நாள் வேலை திட்டத்தை உயர்த்தினார்களா?”
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சோர்ந்து போய்விட்டன. அழுது கொண்டே சிரிக்கிறேன் என்று மதிமுக நிர்வாகி கூறுகிறார். அப்படி அமைக்கப்பட்ட கூட்டணிதான் திமுக கூட்டணி. பிரேமலதா உண்மையான ஒரு செய்தியை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நாம சொல்லவில்லை. ஸ்டாலினை அமரவைத்து ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் பேசிய பேச்சு வலைத்தளத்திலே வந்தது தொலைக்காட்சியிலே வந்தது. அப்படி என்றால் அந்த கட்சிக்கு ஓட்டு போடலமா? இவ்வாறு அவர் பேசினார்.