தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக நாளை தேர்ந்தெடுக்கப்படுவார்: டிகேஎஸ் இளங்கோவன்

.தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பா.ஜ.க-வை ஏற்க மாட்டார்கள் என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை முடிவு செய்வதற் கான தேர்தல் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது.இதற்காக 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 4 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 833 வாக்காளர் களில் பெண்கள் அதிக அளவில் ஓட்டுப் போட்டுள்ளனர். 2 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 596 பெண்களும், 2 கோடியே 35 லட்சத்து 34 ஆயிரத்து 720 ஆண்களும், 4 ஆயிரத்து 517 திருநங்கைகளும் வாக்க ளித்துனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் கண்ட நிலையில் விஜய்யின் த.வெ.க., சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தனித்து போட்டியிட்டன. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்பும், பேச்சு காரசாரமான விவாதமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மக்கள் தீர்ப்பை தமிழகமே எதிர்பார்த்து உள்ள நிலையில், நாளை திமுகவே வெற்றி பெறும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; நாளை மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பா.ஜ.க-வை ஏற்க மாட்டார்கள். த.வெ.க-வினரிடம் சில ரீல்ஸ்கள் உள்ளன.. அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அதை மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார்கள்