தமிழக செய்திகள்

அம்மா மருந்தகங்களில் மு.க. ஸ்டாலின் படங்களை அகற்ற வேண்டும் : பாப்புலர் முத்தையா கோரிக்கை

அம்மா மருந்தகங்களில் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சமீப காலமாக அம்மா உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி வழங்குவதை உறுதிபடுத்திடுமாறும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கூறியதாவது:-

2014-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்கள், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியில் 'முதல்வர் மருந்தகம்' என பெயர் மாற்றப்பட்டு மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அம்மா மருந்தகங்களில் மு.க. ஸ்டாலின் படங்களை அகற்றிவிட்டு, புதிய முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என- தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளருக்கு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கோரிக்கை விடுத்துள்ளார்.