சென்னை,
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 1ம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர் தின நினைவுச்சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து மே தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கக்கூடிய உழைப்புக்கு பலன் வருகிற மே 4-ந் தேதி பெறவிருக்கிறோம். அதில் ஒரு துளி அளவும் மாற்றமில்லை. கருத்துக் கணிப்புகளை வைத்து கூறவில்லை. களத்தை பார்த்ததால் கூறுகிறேன். கழகத்தின் உணர்வை உணர்ந்து கொண்டிருக்கும் காரணத்தால் அந்த கருத்தை எடுத்து வைத்திருக்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் திமுக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.