சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது மத்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த பாதுகாப்பு வகைகளில் ஒன்றாகும். உயிருக்கு மிகுந்த ஆபத்து உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
முக்கியமாக நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மாநில முதல்-மந்திரிகள், முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.
ஒரு நாளைக்கு 36 பேர் கொண்ட பாதுகாப்பு குழு மூன்று வேளைகளில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் இதில் அடங்குவர்.
இந்த பாதுகாப்பு குழுவினருக்கு நவீன துப்பாக்கிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்படும். இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது இசட் பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு அளிக்கும் மிக உயர்நிலை பாதுகாப்பு முறையாகும்.
இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆட்சி மாறியதும் இசட் பிளஸ் பாதுகாப்பு இசட் பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு வழங்கப்பட்ட அதே பாதுகாப்புதான் இனி ஸ்டாலினுக்கும் இனி ஒரு எஸ்ஐ தலைமையில் தமிழக போலீசார் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு அளிப்பர்.
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்டாலினின் பாதுகாப்புப் பிரிவு திடீரெனக் குறைக்கப்பட்டிருப்பது, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.