பெருந்துறை
பெருந்துறை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
ஈரோடு அருகே உள்ள மேட்டுக்கடையில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் இருந்து கார் மூலம் மேட்டுக்கடை செல்லும் வழியில் பெருந்துறை வந்தார்.
பெருந்துறை அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் வந்த அவருக்கு, பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புறப்பட்டு சென்றார்
இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.சின்னசாமி, தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் சுப்ரீம்சுப்பிரமணியன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய பிரதிநிதி ராஜலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.ஜி.கே.பூபதி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் வீ.சி.தங்கவேல், ஒன்றிய பிரதிநிதி எல்.ஐ.சி.பாலாஜி, பொறியாளர் அணி அமைப்பாளர் வெற்றி வெங்கடேசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் டி.சி.சுப்பிரமணியம், கிழக்கு ஒன்றிய சமூக வலைத்தள பொறுப்பாளர் கங்காலோகீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி என்.விஸ்வநாதன், பேரூராட்சித் தலைவர் கோகிலாதங்கமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சோளிபிரகாஷ் (திருவாச்சி), கண்ணம்மா (சின்னவீரசங்கிலி), தமிழரசிபூபதி (கருக்குபாளையம்) உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பெருந்துறை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள சுற்றுலா பயணியர் விடுதியில் தங்கி ஓய்வு எடுத்த பிறகு மாலை 6 மணிக்கு திருமண மண்டபத்துக்கு புறப்பட்டு சென்றார்.