தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டின் 55-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வந்தார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.