சென்னை,
“கைக்குழந்தைகளை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வருவது அரசியல் விளம்பரத்திற்காக” என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய், எம்.பி. சிதம்பரம் உட்பட பல்வேறு அரசியல் தலைவர் கலந்துக் கொண்டனர். இதில் தவெக எம்.எல்.ஏ. பல்லவி கைக்குழந்தையுடன் நிகழ்ச்சிக்கு வந்தார்.
இது தொடர்பாக எம்.பி. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்:-
"பணியிடங்களில் குழந்தைகள் காப்பகம், மகப்பேறு விடுப்பு, தந்தையர் விடுப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறேன். ஆனால், கைக்குழந்தையைத் தொடர்ந்து பொதுநிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது அரசியல் விளம்பரத்திற்காகவும், சுவனத்தை ஈர்ப்பதற்காகவும் செய்யப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் உரிய ஆலோசனை வழங்குவார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.