சென்னை,
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி அவர்களின் கனவான வளர்ச்சி அடைந்த பாரதத்தினை எட்டும் மைல்கல்லாக இந்தியாவின் முதல் புல்லட் ரெயிலின் மாதிரி புகைப்படம் ரெயில்வே அமைச்சகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரெயில்வே துறையை நவீனமயமாக்கும் முயற்சியின் விளைவாக வந்தே பாரத், அம்ரித் பாரத் ரெயில்களின் வரிசையில் அடுத்த வருடம் முதல் சீறிப்பாய உள்ளது இந்த புல்லட் ரெயில். மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் மும்பை - அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரத்தினை இந்த புல்லட் ரெயில் வெறும் 2 மணி 10 நிமிடங்களில் கடக்க உள்ளது ரெயில்வே துறை இமாலய சாதனையாகும்.
இதற்கான பெருமுயற்சிகளை மேற்கொண்டு இந்திய ரெயில்வே துறையை உலகத்தரத்தில் உயர்த்தி வரும் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில்வே அமைச்சகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.