சென்னை
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மாதிரி பத்திரப்பதிவு மையங்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழக அரசின் வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை வடக்கு, சென்னை மத்திய, சென்னை தெற்கு, செங்கல்பட்டு, கோவை வடக்கு மற்றும் தாம்பரம் ஆகிய 6 பதிவு மாவட்டங்களில் புதிய இணை சார்-பதிவாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அலுவலகங்கள் அந்தந்த மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு, மாதிரி பதிவு மையங்களாக செயல்படும். மேலும், இந்த இணை சார்-பதிவாளர்களுக்கு பதிவாளர் மேற்கொள்ளும் அதிகாரங்கள் மற்றும் பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.