தமிழக செய்திகள்

மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் நவீன துப்பாக்கி...!

மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் நவீன துப்பாக்கி இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே குப்பை தொட்டியில் இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க நவீன துப்பாக்கி இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் அது குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்திற்கும், சிறை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்ததின்அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT