தமிழக செய்திகள்

தமிழகத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் மோடி அரசு! - நயினார் நாகேந்திரன் பெருமிதம்

மத்திய அமைச்சரவைக்கு தமிழக மக்கள் சார்பாக நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு மோடி அரசு வலுசேர்த்துள்ளதாக நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நெஞ்சார்ந்த நன்றி

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடி நிதிச்செலவில், சுமார் 900 மீட்டர் நீளம் கொண்ட இரண்டாவது சரக்கு பெட்டக முனையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ள பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

வியக்க வைக்கிறது

ஆண்டுக்கு 20 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்ட இப்புதிய சரக்கு முனையத்தின் மூலம், தமிழகத்தின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகள் விரிவடைதோடு, துறைமுகத்தின் சரக்குப் போக்குவரத்து நெரிசலும் குறையும்! அதுமட்டுமன்றி நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இத்திட்டம் மூலம், தமிழகத்தில் புதிய முதலீடுகள் பெருகவும் வாய்ப்புள்ளது! தமிழகத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் ஒருசேர வலுப்படுத்தும் இத்திட்டத்தை முன்மொழிந்துள்ள மத்திய பாஜக அரசின் தொலைநோக்குப் பார்வை, நம்மை வியக்க வைக்கிறது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT