சென்னை,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து முதல்முதலாக குரல் கொடுத்தவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை வைத்து எதிர்கட்சிகளை பாஜக மிரட்டுகிறது. அச்சுறுத்துகிறது. அதன் அடிப்படையில் தான் பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி என கூறினேன்.
அரசு இயந்திரத்தை மோடி தவறாக பயன்படுத்தியதற்கு ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவருவதை எதிர்க்கட்சிகள் தடுப்பதாக பாஜக கூறுவது பொய்.
2023-ல் நிறைவேறியதை மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் சேர்த்து கொண்டுவர முயன்றனர். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் எதிர்த்தோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து பாஜகவுக்கு பயம். அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது? ஏன் என கேள்வி எழுப்பினார்.