தமிழக செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகள் நடை பெறயிருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்படும்.

நெல்லை,

திருநெல்வேலியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

110/33-11KV மேலப்பாளையம் , 33/11 KV ரெட்டியார்பட்டி , மற்றும் 33/11 KV புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறயிருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மின் தடை ஏற்படும் இடங்கள்

* மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குல வணிகர் புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான் குளம், ஈஸ்வரியா புரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுல வணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி.

* ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன் தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி.

* பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என் ஜி ஓ காலனி, மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால் நகர், ராமச்சந்திரா கார்டன், ராமச்சந்திரா நகர் , பரணி பார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.