தமிழக செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தென்காசி,

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை (16.5.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் கீழ்க்கண்ட இடங்களில் இருக்காது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (16.5.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.