திருநெல்வேலி.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பின்வரும் கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை (6.6.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தியாகராஜநகர், கொக்கிரகுளம் துணைமின் நிலையங்களில் நாளை (6.6.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால் பின்வரும் பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
தியாகராஜநகர், மகாராஜாநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூர், I.O.B. காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன்குளம், AR Line, கோரிப்பள்ளம், ரயில்வே பீடர் ரோடு, EB காலனி, ராஜேந்திரன் நகர், ராம் நகர், காமராஜர் சாலை, அன்பு நகர், என்.எச்.காலனி, சித்தார்த் நகர் மற்றும் லக்கி காலனி திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோ நகர், பரணி நகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
அதேபோல் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் கடந்த 2.6.2026, செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருந்தது. அதன்படி பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சில நிர்வாக காரணங்களுக்காக அந்த மின்தடை நாளை (6.6.2026, சனிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரிரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
களக்காடு மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களில் நாளை (6.6.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில்.
பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் துணைமின் நிலையங்களில் நாளை (6.6.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை.
கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி.
அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி.
மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர், கோவிந்தபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.