திருநெல்வேலி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி AMRL துணை மின் நிலையம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மாள் சாலை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாங்குநேரி AMRL துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
நாங்குநேரி, ராஜக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீ வனஜா வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர், தென்காசி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.