தமிழக செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: நெல்லை, தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் மற்றும் தென்காசி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி,

திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் மற்றும் தென்காசி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும்.

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் கோட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூர் கோட்டம்

வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வள்ளியூர் மற்றும் விஜயாபதி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (17.11.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி.

கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்

திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பழையபேட்டை, பொருட்காட்சி திடல் மற்றும் தியாகராஜநகர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (17.11.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

திருநெல்வேலி டவுன், மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, கோடீஸ்வரன்நகர், சாஸ்திரிநகர், தீன்நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன் SN ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரதவீதி, போஸ் மார்க்கெட், A.P.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்கு தெரு, ராம்நகர், ஊருடையான் குடியிருப்பு பகுதிகள்.

தியாகராஜநகர், மகாராஜாநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூர், I.O.B. காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன்குளம், AR Line, கோரிப்பள்ளம், ரெயில்வே பீடர் ரோடு, EB காலனி, ராஜேந்திரன்நகர், ராம்நகர், காமராஜர் சாலை, அன்புநகர், என்.எச். காலனி, சித்தார்த்நகர் மற்றும் லக்கி காலனி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தென்காசி கோட்டம்

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீவனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (17.11.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர்.

வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT