தமிழக செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் கோட்டம்

கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (31.10.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT