தென்காசி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள பின்வரும் கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (9.6.2026, செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) முஜீப் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடுவக்குறிச்சி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (9.6.2026, செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அன்று பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரவித்துள்ளார்.
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (9.6.2026, செவ்வாய்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது.
தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.