தமிழக செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் 17-ம் தேதி மின்தடை

தூத்துக்குடி நகர்ப்புற துணைமின் நிலையத்தில் வருகிற 17-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர்ப்புற துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 17-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகர்ப்புறம்

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர்ப்புற துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 17.11.2026, செவ்வாய்க்கிழமை அன்று நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

17-ம் தேதி மின்தடை

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி நகர்ப்புற விநியோக செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வருகிற 17.11.2026, செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி நகர்ப்புற துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1-ம்கேட், 2-ம்கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டயாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி.ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் ரோடு, ஜெயராஜ் ரோடு, தாமோதரநகர், சண்முகபுரம் வடக்கு, மேலசண்முகபுரம் முதல் தெரு, திரவியபுரம், முத்துக்குட்டிநாபுரம், சுந்தரவேல்புரம், முத்தம்மாள்காலனி, அம்பேத்கர்நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், விவிடி மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்குரம், லோகியாநகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டைரோடு, சிதம்பரம்நகர், பிரையண்ட்நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் மின் பராமரிப்புப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT