திருநெல்வேலி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், திருநெல்வேலி கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் உள்ள பகுதிகளில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கூடன்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லிடைக்குறிச்சி கோட்டம் விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணை மின் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி காரையார், சேர்வலார், பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிளைபட்டி, முதலியார்பட்டி, தாட்டான்பட்டி, கொண்டபையன்பட்டி, வடமலைசமுத்திரம், பசுக்கிடைவிளை, சங்கரபாண்டியபுரம், கருத்தையாபுரம், அய்யனார்குளம்.
ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், A.P. நாடானூர், துப்பாகுடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.