திருநெல்வேலி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மற்றும் திருநெல்வேலி கிராமப்புற கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வள்ளியூர் மற்றும் விஜயாபதி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (13.10.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்குவள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி.
கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (13.10.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.