திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தச்சநல்லூர் துணை மின் நிலையத்த்தில் நாளை மறுநாள் (19.11.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வ விக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கியநகர், தெற்கு பாலபாக்கியநகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர், செல்லபாண்டியன் சிலை முதல் ஆற்றுப் பாலம் வரை வடக்கு புறவழிச் சாலை, இளங்கோநகர், காவேரி ஹாஸ்பிடல் பகுதி, இந்திராகாலனி, கரிமேடுபகுதி, எட்டுத்தொகை தெரு, கம்பராமாயணம் தெரு, கட்டுப்பாட்டு தெரு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாங்குநேரி மற்றும் திசையன்விளை துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (19.11.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
நாங்குநேரி, ராஜக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ்ஊர், பெருமளஞ்சி மேல்ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம்.
திசையன்விளை, முருகேசபுரம், மருதநாட்சிவிளை, நாடார் அச்சம்பாடு, மடத்தச்சம்பாடு, இடையன்குடி, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.