தமிழக செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூர் கோட்டம்

வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திசையன்விளை மற்றும் கோட்டைகருங்குளம் துணைமின் நிலையங்களில் நாளை (7.10.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

திசையன்விளை, மகாதேவன்குளம், அப்புவிளை, ஆயன்குளம், நந்தன்குளம், செல்வமருதூர், எருமைக்குளம்.

கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT