திருநெல்வேலி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகர்ப்புறம் மற்றும் வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணைமின் நிலையத்தில் நாளை (8.10.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரதவீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, கோட்டீஸ்வரன்நகர், சாஸ்திரிநகர், தீன்நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலிடவுன் SN ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரர்தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழரதவீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாங்குநேரி (AMRL) துணை மின் நிலையத்தில் நாளை (8.10.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
நாங்குநேரி, இராஜக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.