தமிழக செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் உள்ள பழையபேட்டை, பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி,

திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) ஜெயசீலன்த வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் நாளை (11.6.2026, வியாழக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:

அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்தி நகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை தொழிற்பேட்டை, கோட்டீஸ்வரன் நகர், சாஸ்திரி நகர், தீன் நகர், திருமங்கை நகர், செந்தமிழ் நகர், பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன் SN ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரத வீதி வீதி, போஸ் மார்க்கெட், A.P.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செயய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.