தமிழக செய்திகள்

திருவள்ளூரில் மொபட்- லாரி மோதல்; ஆசிரியை பலி

திருவள்ளூரில் மொபட்- லாரி மோதலில் ஆசிரியை சரண்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

திருவள்ளூர் பூங்காநகர் அப்பாசாமி சாலை பகுதியை சேர்ந்தவர் தேவகுமார். இவரது மனைவி சரண்யா (வயது 33). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 13-ந்தேதி தனது மொபட்டில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான உழவர் சந்தை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே திருத்தணி நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரண்யாவை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சரண்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த விபத்து குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT