தமிழக செய்திகள்

நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து

கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய்யின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்கள், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள், மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளிலும் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணி, புதிய போர்வெல், வாரச்சந்தை கடைகள் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர்கள் வெளியிடப்பட்டன. டெண்டர் கோரி டெண்டர் சமர்ப்பிப்பதற்கு ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை நகராட்சி நிர்வாக வட்டாரங்களிலும் ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.