தமிழக செய்திகள்

இன்ஸ்டாகிராமில் அதிக மக்கள் பின்தொடரும் தமிழக அரசியல் தலைவர்கள்: முதலிடத்தில் யார் தெரியுமா.?

இளம் தலை முறையினர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களையும் பின் தொடர்கிறார்கள்.

சென்னை,

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் மோகம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலமாக பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி பலர் வருவாயும் ஈட்டி வருகிறார்கள். இதுபோன்று இன்ஸ்டாகிராம் அதிகம் பயன்படுத்தும் இளம் தலை முறையினர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களையும் பின் தொடர்கிறார்கள்.

அந்த வகையில், தமிழக அரசியல் தலைவர்களை எடுத்துக்கொண்டால் அண்ணாமலையை 25 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். தமிழக அரசியல் தலைவர்களில் இவரே முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அவரை 23 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். 3-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலினும் (13 லட்சம்) 4-வது இடத்தில் விஜய்யும் (8.2 லட்சம்) உள்ளனர்.

5-வது இடத்தில் சீமான் உள்ளார். அவரை 4.68 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அன்புமணியை 2 லட்சம் பேரும், எடப்பாடி பழனிசாமியை 1.39 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர்.

SCROLL FOR NEXT