திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர் கள் வந்து செல்கின்றனர். அதேபோல் கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கா னோர் தங்கியுள்ளனர். அவ்வாறு கோவில் வளாகத்தில் சுமார் 70 வயதான தாயும், 40 வயதான அவரது மகனும் தங்கி உள்ளனர்.
இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் யாசகம் பெற்று வருகின்றனர். யாசகம் பெற்ற பணத்தை தங்களின் பையில் சேகரித்து வைத்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டத்திற்கு நடுவே உட்கார்ந்து, பையில் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை இருவரும் வெளியே எடுத்தனர்.
ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 என ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து திடீரென கிழித்து வீசினர். இதைக்கண்ட பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கஷ்டப்பட்டு யாசகம் பெற்ற பணத்தை எதற்கு கிழித்து போடுகிறீர்கள்? என்று அவர்களிடம் சிலர் கேட்டனர். அதற்கு தாயும், மகனும் அது எங்கள் பணம், இதை கேட்க நீங்கள் யார்? என ஆவேசத் துடன் பதிலளித்தனர்.
இப்படியாக தாயும், மகனும் சேர்ந்து ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாய் நோட்டுகளை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.