தமிழக செய்திகள்

சாத்தான்குளத்தில் தாய் கொலை: கடத்தப்பட்ட மகள்கள் மீட்பு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி,

சாத்தான்குளத்தில் வீடு புகுந்து தாயை கொன்று, அவரது 2 பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரில் வீடு புகுந்து மேரி ரெஜிலா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் மேரி ரெஜிலாவின் கணவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவர்கள் மகனான பிளஸெட் ராஜாவுக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலை சம்பவம்

இந்த சம்பவத்தில் 15 வயதுடைய இரு பெண் குழந்தைகள் வீட்டில் இருந்து மாயமாகவே, அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஆனந்தபுரம் பகுதியில் பூட்டப்பட்ட இருட்டு அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கொலை சம்பவத்திற்குப் பிறகு சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டனரா? கொலையில் ஈடுபட்டது தனி நபரா? கும்பலா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT