பாலக்காடு,
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன் பாறை கூராங்காடு பகுதியில் வசிப்பவர் ஜான் குமார் (வயது 36). தொழிலாளி. இவரது மனைவி நிவேத்யா (29). இவர்க ளுக்கு ஜெனிபர் ஜூலியட் (வயது 5) என்ற மகளும், ராபின் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் 29-ந் தேதி, இவர்கள் 2 பேரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் குளியலறையில் உள்ள தொட்டியில் மூழ்கி கிடந்தனர். இதையடுத்து தொட்டியில் குழந்தைகள் தவறி விழுந்து விட்டதாக கூறி நிவேத்யா சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெனிபர் ஜூலியட், ராபின் கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நிவேத்யாவிடம் கொழிஞ்சாம்பாறை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், மாடலிங்கில் ஈடுப டவும், தொடர்ந்து படிக்கவும் குழந்தைகள் தடையாக இருப்ப தாக கருதி குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததை நிவேத்யா ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். நிவேத்யாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவருக்கும், மேனோன்பாறை பாரக்குழி பகுதியை சேர்ந்த மார்ட்டின் இக்னேஷியஸ் (36) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. சம்பவத்தன்று ஜான் குமார் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் இருந்த குழந்தைகளை நிவேத்யா கொலை செய்தார்.
அப்போது வெளியில் இருந்து யாராவது வருகிறார்களா என மார்ட்டின் இக்னேஷியஸ் நோட்டமிட்டது விசாரணையில் தெரி யவந்தது. இதன் மூலம் அவர் இரட்டை கொலைக்கு உடந் தையாக இருந்துள்ளார். இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.