மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 4 வயது சிறுவன் மர்மான முறையில் உயிரிழந்ததாக வந்த தகவல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த சிறுவனின் தாய், தனது கணவரை பிரிந்து சம்பு சர்மா என்பவருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், உயிரிழந்த 4 வயது சிறுவனின் உடலில் காயங்கள் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த சிறுவனின் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்யவும் முயற்சியில் நடந்துள்ளன. இதற்கிடையில் போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் உள்காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனின் கள்ளக்காதலன் சம்பு சர்மாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது சம்பு சர்மா, அந்த சிறுவனை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்தும், சிறுவனின் தாய்க்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.