தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்

சங்கராபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெருக்கஞ்செடி கிராமத்தை சேர்ந்த குள்ளான் மகன் ஆறுமுகம் (வயது 44) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT