சென்னை,
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு கண்காணிப்பு கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது மற்றும் லைசென்ஸ் இல்லாமலும், மது அருந்திவிட்டு வாகனங்கள ஓட்டுவதற்காகவும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். தானியங்கி எண் பலகை கண்டறிதல் கேமராக்கள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு போன்றவை மூலம் உருவாக்கப்பட்ட மின் சலான்கள் பற்றி பல வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. அதனால் அபராத தொகை செலுத்தப்படாமல் நிலுலையில் உள்ளது.
பல வாகன ஓட்டிகளுக்கு தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் என்னவென்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். சென்னையில் பல கோடி ரூபாய் அபராத நிலுவைத் தொகை உள்ளது. இதனை வசூலிக்க போக்குவரத்து போலீசார் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.
போக்குவரத்து விதி மீறலுக்காக விதிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மின் சலான்களை வாகன ஓட்டிகள் சரிபார்த்து செலுத்துவதற்கு உதவ சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நகரம் முழுவதும் 15 சிறப்பு அழைப்பு மையங்களை அமைத்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது. வருகிற 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்த மையங்கள் செயல்படும். இந்த மையங்கள் 10 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். காவல்துறையினர் வாகன ஓட்டிகளை தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள சலான்கள் பற்றி தெரிவிப்பார்கள். மொத்தமாக எஸ்.எம்.எஸ். விழிப்புணர்வுகளை அனுப்புவார்கள்.
தொலைபேசி அல்லது நேரில் விவரங்களை கேட்பவர்களுக்கு தகவல்கள் வழங்கப்படும். வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள சலான்களை ஆன்லைனில் சரி பார்த்து ஆன்லைன் போர்ட்டல்கள், பேடிஎம், தபால் நிலையங்கள் மற்றும் மின் சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். மது போதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதங்களை நீதிமன்றம் மூலமாக செலுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள செலான்களை சரி பார்த்து அபராதத்தை செலுத்த ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து போலீசார் அமைத்துள்ள 15 மையங்கள் விவரம் வருமாறு:
1 அயனாவரத்தில் உள்ள ஐ.சி. எப். அனெக்ஸ் போலீஸ் பூத்
2) ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி போலீஸ் பூத்
3) அபிராமபுரத்தில் உள்ள கிரீன்வேஸ் சந்திப்பு போலீஸ் பூத்
4) அண்ணா சாலையில் உள்ள டவர் க்ளாக் சந்திப்பு போலீஸ் பூத்
5) அண்ணா நகர் சுழற்சி
6) அண்ணா ஆர்.சி. போக்குவரத்து போலீஸ் பூத்
7) மதுரவாயல் போக்குவரத்து போலீஸ் நிலையம்
8) மாதவரம் போக்குவரத்து காவல் நிலையம்
9) பூக்கடை போலீஸ் நிலையம்
10) வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம்
11) புளியந்தோப்பு போலீஸ் நிலையம்
12) மாம்பலம் போலீஸ் நிலையம்
13) அடையாறு போலீஸ் நிலையம்
14) கத்திப்பாரா மேம்பா லத்தின் கீழ் உள்ள போக்கு வரத்து மவுண்ட் சப் டிவிஷன் வளாகம்
15) வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவ லகத்தில் உள்ள தலைமையகம்.