பெட்ரோல், டீசல்  
தமிழக செய்திகள்

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தனியார் நிறுவனம்

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லை.

சென்னை,

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில், தனியார் எரிபொருள் நிறுவனமான நயாரா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

லிட்டருக்கு ரூ.5 வரை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, நயாரா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது.

7,000-க்கும் மேற்பட்ட நிலையங்கள்

இந்தியாவில் நயாரா நிறுவனத்திற்கு சொந்தமாக 7,108-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விலை உயர்வு நாடு முழுவதும் உள்ள அனைத்து நயாரா எரிபொருள் நிலையங்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள்

தனியார் நிறுவனம் விலையை உயர்த்தியுள்ள போதிலும், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது பெட்ரோல், டீசல் விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் நயாரா மட்டும் எரிபொருள் விலை கூடுதலாக இருக்கும்.

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை சற்றே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT