சென்னை,
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா.குமார் முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மையம் அமைக்க எல்காட் (ELCOT) மற்றும் ஐ.ஐ.டி.எம். பிரவர்த்தக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா.குமார் முன்னிலையில் இன்று(05.11.2026) தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அரசுக்கான செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மையத்தை அமைப்பதற்கான திட்டக் கண்காணிப்புப் பிரிவாக(Project Monitoring Unit) செயல்பட, எல்காட் (ELCOT) நிறுவனம், ஐ.ஐ.டி.எம். பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன்(ஐ.ஐ.டி. மெட்ராஸ்) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) மேற்கொள்ளப்பட்டது.
(State Data Center) மதிப்பாய்வு செய்வதும், அரசாங்கத்தின் பல்வேறு செயலிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உகந்ததாக(Al-ready) மாற்றி, அவற்றை இந்த புதிய மையத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான திட்டங்களை வகுப்பதும் இதன் முக்கியப் பணிகளாகும்.
இந்நிகழ்வின்போது, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.விஷ்ணுசந்திரன், ஐ.ஐ.டி.எம். பிரவர்த்தக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜே.சங்கர்ராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.