தமிழக செய்திகள்

லட்சியப் பாதையில் முன்னேறு; உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்ச் சமூகத்தை காக்கும் பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தனது தந்தையும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் லட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது.

திமுகவின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்... “Let your work define you” உழைப்பால் உயர்ந்திடு! லட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT